-ந.மயூரரூபன்
கூப்பிடு தொலைவுகளில்
கந்தையாய்த் தொங்கவிடப்படும்
தன்னழுகைகளைச்
சேர்த்து வைத்துப்படுத்திருக்கிறது
காயம்பட்ட அவளுடல்.
குழந்தைகள் படுத்திருக்கும்
கனவுப்பாலை வெளியிலிருந்து
அவள் இழுக்கப்படும் பொழுதுகளிலெல்லாம்
தொங்கு்ம் அழுகைகளின் சலனம்
இந்த வெளியில் மெல்ல ஊர்கிறது.
அவளுடலின் மேலாக
நாக்கைத் தொங்கவிடும் நாய்களின்
நிழல் உதைந்தேறுகிறது.
ஆன்மாவின் மொக்குள்
அவளுக்கான இருள்வட்டம் காணுகிறது.
ஒளிவட்டமில்லா
பாழ்வெளி மக்களலையும்
எங்கள் நிலங்களில்
பெண்களின் அழுகைகள்
கூப்பிடுதொலைவில்
அலைந்து தொங்குகின்றன....
தொங்கியலைகின்றன.
270320111850
கூப்பிடு தொலைவுகளில்
கந்தையாய்த் தொங்கவிடப்படும்
தன்னழுகைகளைச்
சேர்த்து வைத்துப்படுத்திருக்கிறது
காயம்பட்ட அவளுடல்.
குழந்தைகள் படுத்திருக்கும்
கனவுப்பாலை வெளியிலிருந்து
அவள் இழுக்கப்படும் பொழுதுகளிலெல்லாம்
தொங்கு்ம் அழுகைகளின் சலனம்
இந்த வெளியில் மெல்ல ஊர்கிறது.
அவளுடலின் மேலாக
நாக்கைத் தொங்கவிடும் நாய்களின்
நிழல் உதைந்தேறுகிறது.
ஆன்மாவின் மொக்குள்
அவளுக்கான இருள்வட்டம் காணுகிறது.
ஒளிவட்டமில்லா
பாழ்வெளி மக்களலையும்
எங்கள் நிலங்களில்
பெண்களின் அழுகைகள்
கூப்பிடுதொலைவில்
அலைந்து தொங்குகின்றன....
தொங்கியலைகின்றன.
270320111850
எங்கள் நிலங்களில்
பதிலளிநீக்குபெண்களின் அழுகைகள்
கூப்பிடுதொலைவில்
அலைந்து தொங்குகின்றன....
என்ன செய்வது? மண்ணிலே விஷநாற்றுக்கள் முளைத்து விட்டன !!
அவளுடலின் மேலாக
பதிலளிநீக்குநாக்கைத் தொங்கவிடும் நாய்களின்
நிழல் உதைந்தேறுகிறது.
"எங்கள் நிலங்களில்
பதிலளிநீக்குபெண்களின் அழுகைகள்
கூப்பிடுதொலைவில்
அலைந்து தொங்குகின்றன....
தொங்கியலைகின்றன"
மன ஆழத்திலிருந்து அழும் மொழி
இன்னும் மிச்சமுள்ளது- என்னிடமும்தான் மயூரன்.
ஒளிவட்டமில்லா
பதிலளிநீக்குபாழ்வெளி மக்களலையும்
எங்கள் நிலங்களில்
பெண்களின் அழுகைகள்
கூப்பிடுதொலைவில்
அலைந்து தொங்குகின்றன....
தொங்கியலைகின்றன.
அற்புதமான கவிதை முக்கியமான பதிவும் கூட அதிகம் பரிதாபத்துக்குறியவர்கள் நமது பெண்கள்தான் எனது வேட்டுவ சொற்களோடு புணருகிறாள் என்ற கவிதையும் இதைத்தான் பேசியது