செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சாத்தானின் ஒரே பழம்

-ந.மயூரரூபன்

கை படாத காற்று அது.
பார்வை விழாத நிலத்தில்
படரும் ஒழுங்கே
அதனுச்சியில் அறையப்பட்டது.

மாறுங் காலத்தின்
இருக்கையின் துகள்கள்
ஒளிந்து கொள்வதற்காய்
அந்த ஒற்றைப் பழத்துள் புதைகின்றன.

புதைவழியை
வரைந்து கொடுக்கும் பெருமரம்
காற்றின் குலக்குறியமது.

நுனி தெரியாக்
காலத் தொழுகையால்
மயங்கும் காற்றை
கனவுகளால் மிதிக்கும்
ஒற்றைப்பழ மரமது.

நுளை பாவங்களால்
அறுந்து விழும் பழம்
காற்றின் மடியில் மறைகிறது.

அடர் கரங்களுக்குள்
ஆர்ப்பரித்தோடுகிறது காற்று.
எங்கும் கொட்டுகின்றன
அதே புதைதுகள்கள்.

090820111505

9 கருத்துகள்:

  1. மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு பின்பு கருத்துச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. //நுளை பாவங்களால்
    அறுந்து விழும் பழம்
    காற்றின் மடியில் மறைகிறது//.

    ப்டிமங்கள் விரிந்து அரட்டுகிறது நல்ல கவிதை வாழ்த்துக்கள் மயூரூபன்

    பதிலளிநீக்கு
  3. டொக்ரர் நன்றி, எதிர்பார்த்திருக்கிறேன்.

    சுஜந்தன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் கருத்தையும் உங்கள் கவிதையையும் பார்த்தேன். நன்றி தொடர்ந்து சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. "மாறுங் காலத்தின்
    இருக்கையின் துகள்கள்
    ஒளிந்து கொள்வதற்காய்
    அந்த ஒற்றைப் பழத்துள் புதைகின்றன."

    இந்த வரிகள் அர்த்தம் பொதிந்தவை. எனக்குப் பிடித்திருக்கிறது.

    மாறும் காலத்தை தொடர்ந்து பதிவுசெய்யுங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. நன்றி துவாரகன்
    தொடர்ந்து ஊக்கந்தரும் கருத்துக்களைத் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. "..ஒளிந்து கொள்ளும்
    இருக்கையின் துகள்கள்
    ...
    எங்கும் கொட்டுகின்றன
    அதே புதைதுகள்கள்...."

    புதுப்புது அர்த்தங்களை
    விதைத்துச் செல்லும்
    வீரிய வரிகள்.

    பதிலளிநீக்கு
  7. அடர் கரங்களுக்குள்
    ஆர்ப்பரித்தோடுகிறது காற்று.
    எங்கும் கொட்டுகின்றன
    அதே புதைதுகள்கள்...............
    மாற்றும் சிந்தனை கொட்டிய வரிகள், தொடருங்கள் !!

    பதிலளிநீக்கு
  8. நன்றி டொக்ரர் உங்கள் வாசிப்பையும் எண்ணங்களையும் அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.

    நடாசிவா நன்றி

    பதிலளிநீக்கு
  9. நுனி தெரியாக்
    காலத் தொழுகையால்
    மயங்கும் காற்றை
    கனவுகளால் மிதிக்கும்
    ஒற்றைப்பழ மரமது./

    அழகான கவிதை..
    சுப்பர்....

    பதிலளிநீக்கு