சனி, 2 ஜூலை, 2011

பச்சை வார்த்தைகளும் வண்ணத்துப் பூச்சிகளும்

-ந.மயூரரூபன்

மகரந்தத்துள் மூழ்கும்
சந்திப்பொன்றில் எறிந்தேனென்னை.
அசையும் காலத்தைப் புசித்தபின்
அசையாக் காலத்துள்
காய்ந்து முளை செத்த வெட்டையின்
ஒவ்வொரு மூலைகளிலும் தொங்குகிறேன்.

என்னைப் பொறுக்கித்
தன்னைப் புனையும் வார்த்தைகள்
என்னைச் சுற்றிப் பறக்கின்றன.
பச்சையிலைகளாய் நிறைய
இறகு முளைக்கும் புழுக்கள்
பச்சை வார்த்தைகளைத் தின்னுகின்றன.

எஞ்சிய காலத்தின் ஓட்டைகளில்
தொங்கும் என் மீது
வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கின்றன.
சூடு முளைக்குமிந்த வெட்டையில்
பறத்தல் மறந்து
வண்ணச் சிறகுகள் விழுகின்றன.

020720111450

7 கருத்துகள்:

  1. எங்கள் எஞ்சிய காலத்தை இப்போதோ எதிர்கொண்டிருக்கிறோம். புழு அரித்து ஓட்டையாகிப்போன உங்கள் கவிதையில் வரும் இலையைப்போலவே.தொடர்ந்து இன்னும் இன்னும் எழுதவேண்டும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. "எஞ்சிய காலத்தின் ஓட்டைகளில்
    தொங்கும் என் மீது
    வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கின்றன" நல்லதொரு சிந்தனை மயூரா.

    பதிலளிநீக்கு
  3. நன்றி துவாரகன்,அமுதன்,நடாசிவா

    பதிலளிநீக்கு
  4. என்னைப்பொறுக்கி தன்னைப்புனையும் வார்த்தைகள்....

    பதிலளிநீக்கு