-ந.மயூரரூபன்
வானம் தனக்கான
நிறங்களைப் பெய்துகெண்டிருக்க
அந்தக்காடு அசைவற்று
அங்கேயே விரிந்திருக்கிறது.
வெறும் வானத்தினெஞ்சிய நிழல்கள்
கறுத்தெரிந்த போதும்
நீறிச் சாம்பரானபோதும்
தூசிபடியும் தன்வார்த்தைகள்மீது
துடிப்பற்றே படுத்திருந்தது அக்காடு.
வானத்தின் புன்னகைகள்
கொட்டியபோதும்
அதனழுகைகள் அலைந்தபோதும்
காட்டின் உணர்கொம்புகள்
மறைந்தேயிருந்தன.
நீங்கள் வரைந்து கொழுவியது
எனக்கான காடு்.
வானமொடிந்த எனக்குள்
பெரும்பாறையாய்ப் படுத்தருக்கிறது
உருவற்ற அந்த வரிக்காடு.
170420112210
வானம் தனக்கான
நிறங்களைப் பெய்துகெண்டிருக்க
அந்தக்காடு அசைவற்று
அங்கேயே விரிந்திருக்கிறது.
வெறும் வானத்தினெஞ்சிய நிழல்கள்
கறுத்தெரிந்த போதும்
நீறிச் சாம்பரானபோதும்
தூசிபடியும் தன்வார்த்தைகள்மீது
துடிப்பற்றே படுத்திருந்தது அக்காடு.
வானத்தின் புன்னகைகள்
கொட்டியபோதும்
அதனழுகைகள் அலைந்தபோதும்
காட்டின் உணர்கொம்புகள்
மறைந்தேயிருந்தன.
நீங்கள் வரைந்து கொழுவியது
எனக்கான காடு்.
வானமொடிந்த எனக்குள்
பெரும்பாறையாய்ப் படுத்தருக்கிறது
உருவற்ற அந்த வரிக்காடு.
170420112210
வானமொடிந்த எனக்குள்
பதிலளிநீக்குபெரும்பாறையாய்ப் படுத்தருக்கிறது
உருவற்ற அந்த வரிக்காடு. நன்று !!
தூசிபடியும் தன்வார்த்தைகள்மீது
பதிலளிநீக்குதுடிப்பற்றே படுத்திருந்தது அக்காடு.
உங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றிகள் நடா சிவா தமிழ்க்கிறுக்கன், வதிரி சி.ரவீந்திரன். உங்கள் கருத்துக்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு