-ந.மயூரரூபன்
திரவமது தரும் மயக்கம்
நீர்த்துப் போனதாய்
மூலையில் கொட்டப்படுகிறது.
மயக்கப் பொதியாய் வரும்
உணர்வுச் சலனங்கள்
குருணிக் கற்களாய்
வார்த்தைகளின் கரையில்
தட்டுப்படுகின்றன.
அலைகள் செத்த
கடலின் தோணியாய்
உன்னிலெனது காமம்
தனித்தே மிதக்கிறது.
ஆழக்கடலின் அமானுஷ்யத்தில்
விழுந்து போகிறதென் சலனச் சுழிகள்.
இருள் கொத்திய நீருலகில்
மிதக்கிறது என்னுடல்.
காயமீர்த்த கற்கள்
ஒன்றொன்றாய் உதிர்கின்றன.
070720111620

படிமங்கள் விளையாடுகின்றன.கருத்துகள் பலகூறுகின்றன.நன்று.
பதிலளிநீக்குகுறுணிக் கற்களாய் வரிகள் மனதை அரிக்கின்றன. நன்றாக அமைந்துள்ளது.
பதிலளிநீக்குநன்றாக உள்ளது கவிதை
பதிலளிநீக்குவதிரி சி. ரவீந்திரன், டொக்ரர், அமுதன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஎன்ன அற்புதமான கவிதை....
பதிலளிநீக்குவாழ்க,,,,உங்கள் கவித்துவம்....
வாழ்த்துக்கள்,,,,,
can you come my said?
நன்றி நணபரே
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பதிவைப் பாரக்கிறேன்
மயக்கப் பொதியாய் வரும்
பதிலளிநீக்குஉணர்வுச் சலனங்கள்
குருணிக் கற்களாய்.............
அலைகள் செத்த
கடலின் தோணியாய்............
அருமை மயூரா, தமிழ் படிமங்கள் கவிதையாய் மிளிர்கின்றன.
நன்றி நடா சிவா
பதிலளிநீக்குஅலைகள் செத்த கடலில் தோனியாய் அழகான வார்த்தை ஜாலங்கள் தொடருங்கள்!
பதிலளிநீக்கு