புதன், 27 ஜூலை, 2011

பச்சோந்தி மனசு

-ந.மயூரரூபன்

சுற்றிச் சுற்றிக் கத்தும்
பூனைக்குரலின் அசை
மீன் வாசனையற்ற அந்த வெளியில்
வெறுமனே காய்ந்து போகிறது.

ஈரத்தினிடுக்குகள்
ஓடிப்போன சுவடுகளில்
குருதிப்பொட்டுக்கள் மட்டும்
உலர் நிலையழிந்து
அலைவுறுகின்றன.

உடைந்துபோன அம்முட்கள்
வெறுமையின் மடியில் சிதறுகின்றன.

முள் விழுங்கியபின் மனது
மண்டூகமாய் நிறம் மாறுகிறது.
பொழுதுகளின் வெறுமைக் குவியலில்
முக்குளிக்கிறது மிகச் சாதாரணமாய்.

மோட்சம்
இங்கும் மூடப்பட்டிருக்கிறது.

270720111515

5 கருத்துகள்:

  1. வார்த்தைகள் பிறப்புவிக்கும் உங்கள் கவிதைகளில் எப்போதும் ஊடோடிக் கிடக்கிறது உங்களின் தனித்துவம் மயூரரூபன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி மயூ, தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
    சரவணன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்கள் வருகையை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஈரத்தினிடுக்குகள்
    ஓடிப்போன சுவடுகளில்
    குருதிப்பொட்டுக்கள் மட்டும்
    உலர் நிலையழிந்து
    அலைவுறுகின்றன........
    உங்களின் கவிதைகள் யாவும் தனிப் பக்குவம் பெற்றவை ,தொடர்ந்து தாருங்கள் மயூரன் !!

    பதிலளிநீக்கு
  4. நன்றி நடா,தொடர்ந்தும் உங்களின் கருத்துக்கும் வருகைக்குமாக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு