வெள்ளி, 10 ஜூன், 2011

காளான் முளைத்த வெளி

-ந.மயூரரூபன்

என்னைத் தொலைத்துத் திரியும்
அந்தக் காற்று
வெளிச்சம்  பூசிய தன்பொழுதுகளை
மறந்தே போனது.

நான் கலைந்தபின்
தான் மிதக்கும் வெளிகளை
கீறிக் கீறி
இரவின் நார்களையுரித்து
ஒளிந்து கொள்வதற்கான
மாயையொன்றை வரைந்து கொள்கிறது.

நீலக் காளான்முளைத்த வெளிகளில்
எனது இலட்சம் புள்ளிகளும்
கோடிகளாயுடைந்து போயின.
காற்றிலொழுகிய
மூச்சில் அள்ளுண்டுபோகும் நான்
பலவாய்
மிகப்பலவாய்
அந்தக் காளான் வெளிகளில்
புதைந்து கொண்டிருக்கிறேன்.

100620112030

2 கருத்துகள்:

  1. பி.நவினத்துவ கவிதையோ???

    பதிலளிநீக்கு
  2. இனிஷல் போட்ட நவீனத்துவம் மாதிரி தெரியுதோ?
    அபபடியொன்றுமேயில்லை.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு